இந்தியா, சீன எல்லையில் பதற்றம் - இந்தியா, சீனா பேசி தீர்க்கும் என சீன தூதர் தகவல்

இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், இருநாடுகளும் பேசி தீர்க்கும் பிரச்சனை தான் இது என இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்
இந்தியா, சீன எல்லையில் பதற்றம் - இந்தியா, சீனா பேசி தீர்க்கும் என சீன தூதர் தகவல்
x
இந்தியா,சீனா இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், இந்தியாவுடனான எல்லை நிலையாகவும், கட்டுக்குள் உள்ளதாகவும் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வுக்காணும் வழிமுறைகள் இருநாடுகள் இடையே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவுக்கான சீன தூதர் சன்வெய்டாங்,  இருநாடுகளுமே பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பிரச்சனை தான் இது என தெரிவித்துள்ளார். தற்போதைக்கு, இருநாடுகளுக்கும் கொரோனாவை எதிர்த்து போராடுவது தான் இலக்காக இருக்க வேண்டும் என்றும், இருநாடுகளுக்கு இடையிலான பிரச்சனை குறித்து இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும். சன் வெய்டாங் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்