"உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவோம்" - அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய மிரட்டல்

உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தப்போவதாக மிரட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் அதே மேடையில் தம்முடைய கருத்தை மறுத்தார்.
உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவோம் - அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய மிரட்டல்
x
கொரோனா வைரஸ் தாக்கத்தை அலட்சியமாக கையாண்டதால், அதன் பலனை அமெரிக்கா தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.   முதலில் சீன வைரஸ் என பழி சுமத்திய அதிபர்​  டிரம்ப் பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் மீது பழி சுமத்தியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கொரோனா குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க உலக சுகாதார நிறுவனம் தவறி விட்டதாக குற்றம் சாட்டினார். சீனா ஆதரவு நிலைப்பாட்டிலேயே உலக சுகாதார நிறுவனம் இருப்பதாக விமர்சித்த டிரம்ப், அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். உலகமே இக்கட்டான ​சூழலில் இருக்கும்போது நிதியை நிறுத்துவது சரிதானா என நிருபர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தமது கருத்தை மாற்றிய டிரம்ப் நிதியை நிறுத்துவது குறித்து பரிசீலிப்போம் என கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்