உக்ரைன் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட விவகாரம் - விமானத்தின் கருப்புபெட்டியை வழங்க ஈரான் சம்மதம்

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டியை வழங்க அந்நாடு சம்மதம் தெரிவித்துள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் வேடிம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட விவகாரம் - விமானத்தின் கருப்புபெட்டியை வழங்க ஈரான் சம்மதம்
x
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டியை வழங்க அந்நாடு சம்மதம் தெரிவித்துள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் வேடிம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஈரான், கனடா மற்றும் உக்ரைன் நாட்டு கூட்டு நிபுணர்கள் குழு ஆய்வுசெய்த பின்னர்,  இதனை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக ஈரான் நாட்டு பிரதிநிதி ஒருவர் அடுத்த வாரம் உக்ரைன் வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில்  விமானத்தின் கருப்பு பெட்டியை, பிரான்ஸ் நாட்டிற்கு பரிசோதனைக்கு அனுப்பவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக ஒப்படைக்கவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்