உலக அழகியாக 23 வயது கருப்பின ஜமைக்கா பெண் தேர்வு

2019-ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை ஜமைக்கா நாட்டின் 23 வயது பெண் பெற்றுள்ளார்.
உலக அழகியாக 23 வயது கருப்பின ஜமைக்கா பெண் தேர்வு
x
பிரபஞ்ச அழகிப் போட்டியைத் தொடர்ந்து உலக அழகிப் போட்டியை ஃபேஷன் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. அந்த அற்புத தருணம்  லண்டனில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 

69-வது உலக அழகிப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட 120 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். 

பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு முதற்கட்டமாக 40 பேர் தேந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு 10 போட்டியாளர்கள் இறுதிசுற்றுக்கு தேர்வாகினர். 

மிகுந்த எதிர்பார்ப்புடனும், விறுவிறுப்புடனும் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜமைக்கா நாட்டின் 23 வயது பெண் டோனி-ஆன் சிங் உலக அழகி பட்டத்தை வென்றார். அவருக்கு கடந்த ஆண்டின் உலக அழகி பட்டம் வென்ற மெக்ஸிகோவைச் சேர்ந்த வனேசா போன்ஸ் மகுடம் சூட்ட்டினார்.

முன்னதாக  தனித் திறன் சுற்றில் விட்னி ஹூஸ்டனின், 'எனக்கு எதுவும் இல்லை என்ற பாடலை, டோனி-ஆன் சிங் பாடினார். அதை கேட்ட பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.

உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு மேடையில் பேசிய டோனி-ஆன் சிங் ஜமைக்காவை  சிறுமிகளும், உலகெங்கிலும் உள்ள அனைத்து சிறுமிகளுக்கும் - தயவுசெய்து உங்களை நம்புங்கள் என்றார். நீங்கள் உங்கள் கனவுகளை அடைய தகுதியானவர், திறமையானவர் என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள் என்றும் டோனி-ஆன் சிங் என வேண்டுகோள் விடுத்தார். 
இந்த கிரீடம் என்னுடையது அல்ல உங்களுடையது என்றும் உங்களிடம் ஒரு நோக்கம்  இருக்க வேண்டும் என்றும் உலக அழகி டோனி-ஆன் சிங் அறிவுறுத்தினார்.  

மொரண்ட் விரிகுடாவில் பிறந்த டோனி-ஆன் சிங், ஒன்பது வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து புளோரிடாவில் குடியேறியவர். டல்லாஹஸ்ஸியில் உள்ள புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் பெண் கல்வி மற்றும் உளவியலில் பட்டம் பெற்றார். டோனி-ஆன் சிங்கின் தாயார் ஜஹ்ரின் பெய்லி-சிங் ஆப்பிரிக்க-கரீபியன் வம்சாவளியைச் சேர்ந்தவர். தந்தை பிராட்ஷா சிங் இந்தோ-கரீபியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்.

2ஆம் இடம் பிடித்த பிரான்ஸ் அழகி

பிரெஞ்சு மாடல் அழகியான ஓஃபெலி மெசினோ 2019ஆம் ஆண்டின் உலக அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். அவர் இந்த ஆண்டின் மிஸ் பிரான்ஸ் பட்டத்தை வென்றவர். 2வது இடத்திற்கு ஓஃபெலி மெசினோ பெயர் அறிவிக்கப்பட்டதும், அவர் உற்சாகத்தை வெளிப்படுத்தினார். 

3ஆவது இடத்தை பிடித்த இந்திய அழகி...

2019-ஆம் ஆண்டின் உலக அழகி போட்டியில் 3வது இடத்தை இந்திய அழகி பிடித்துள்ளார். 'மிஸ் இந்தியா' போட்டியில் வென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் என்ற 21 வயது பெண் இந்தியா சார்பாக 'உலக அழகி போட்டியில் கலந்துகொண்டார்.






Next Story

மேலும் செய்திகள்