பூனைகள், பறவைகளை நேசிக்கும் மனிதர் - 20 வருடங்களாக உணவளிக்கும் மனிதநேயம்

ஜெருசலேமில் பூனைகள், பறவைகளுக்கு உணவளிக்கும் பணியில் 71 வயதான நபர் ஈடுபட்டு வருகிறார்.
பூனைகள், பறவைகளை நேசிக்கும் மனிதர் - 20 வருடங்களாக உணவளிக்கும் மனிதநேயம்
x
ஜெருசலேமில் பூனைகள், பறவைகளுக்கு உணவளிக்கும் பணியில் 71 வயதான நபர் ஈடுபட்டு வருகிறார். அங்குள்ள மசூதியை சுற்றியிருக்கும் இடங்களில் பூனைகள் மற்றும் பறவைகள் வந்து செல்வது வழக்கம். இதைப் பார்த்த கசன் யூனிஸ் என்ற முதியவர், அவைகளுக்கு உணவளிக்க திட்டமிட்டுள்ளார். அவ்வாறு அவர் எடுத்த முயற்சி 20 வருடங்களை கடந்தும் தொடர்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் அவரை பூனைகளின் தந்தை என்றே அன்போடு அழைக்கின்றனர். தமது சொந்த பணத்தில் உணவளித்து வரும் இவர், ஆத்ம திருப்தியோடு அதனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்