20 குட்டிகளை ஈன்ற தெரு நாய் : லூனா என பெயரிட்டு அடைக்கலம் கொடுத்த அதிகாரிகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தெரு நாய் ஒன்று 20 குட்டிகளை ஈன்றது.
20 குட்டிகளை ஈன்ற தெரு நாய் : லூனா என பெயரிட்டு அடைக்கலம் கொடுத்த அதிகாரிகள்
x
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தெரு நாய் ஒன்று 20 குட்டிகளை ஈன்றது. லேப்ரடார் கலப்பினத்தை சேர்ந்த நாயான  இது அங்குள்ள தெருவோரத்தில் பிரசவ போராட்டத்தில் இருந்தது. இதைக்கண்ட விலங்கின பாதுகாப்பு அதிகாரிகள் அதை பத்திரமாக மீட்டு 'லூனா' எனப் பெயரிட்டு அடைக்கலம் கொடுத்தனர். இதையடுத்து கால்நடை மருத்துவர்களால் அதற்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில்  அழகான இருபது குட்டிகளை லூனா ஈன்றது.  இங்கிலாந்து நாட்டில் 2004ஆம் ஆண்டு, ஒரு நாய் 24 குட்டிகளை ஈன்றதே உலக கின்னஸ் சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 


Next Story

மேலும் செய்திகள்