கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
x
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக திருமூர்த்தி மலை பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பஞ்சலிங்க அருவியில் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்