யூட்யூப் பார்த்து வெடிமருந்து தயாரித்தது வேட்டையாடிய 2 பேர் கைது

தேனி ஆருகே யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
x
ஆண்டிப்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு தெற்கே உள்ள சந்த மலைப் பகுதியில் வனச்சரகர் நாகராஜன், வனவர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு வந்த 2 பேர் அதிகாரிகளை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். 

அவர்களை மடக்கி பிடித்து, சாக்கு பையை கைப்பற்றி பார்த்த போது, அதில் சுமார் 300 கிலோ எடையுள்ள இறந்த காட்டுப் பன்றியின் உடல் மற்றும் வெடிமருந்து ஆகியவை இருப்பது தெரியவந்தது.  

விசாரணையில் சிவகுமார் மற்றும் வேல்சாமி ஆகிய 2 பேரும் யூட்யூப் பார்த்து வெடிமருந்து தயாரித்த வனவிலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது. இதன்பேரில் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடந்து வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்