பெரியார் சிலை சேதமடைந்த சம்பவம் - திமுக பிரமுகர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு

பெரியார் சிலை சேதமடைந்த சம்பவத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தி.மு.க. நகர செயலாளர் உள்ளிட்ட 10 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
பெரியார் சிலை சேதமடைந்த சம்பவத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தி.மு.க. நகர செயலாளர் உள்ளிட்ட 10 பேர் மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் காமராஜர் வீதியில் இருந்த பெரியார் சிலை கடந்த 19 ஆம் தேதி இரவு கன்டெய்னர் லாரி மோதியதில் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து தி.மு.க.வினர் அன்று நள்ளிரவில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் லாரி ஓட்டுனரை தேடி விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்குள் நுழைந்த திமுக நகர செயலாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி எந்தவித அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தி.மு.க. நகர செயலாளர் சக்கரை உள்பட 10 பேர் மீது விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்