சென்னையில் குடியரசு தின அலங்கார ஊர்தி - முதலமைச்சர் ஸ்டாலின்

டெல்லியில் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
x
இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் பங்குபெறும் அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், தமிழகம் மட்டுமல்லாது மே.வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் ஊர்திகளுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில்  வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இந்த அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்