சீறிப் பாய்ந்த மாடுகள் - களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்

சீறிப் பாய்ந்த மாடுகள் - களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
x
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மாட்டு வண்டிப் பந்தயம் களைகட்டியது. போடி - மூணாறு நெடுஞ்சாலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற இந்த பந்தயத்தில், ஏராளமான மாட்டு வண்டி வீரர்கள் பங்கேற்றனர். பந்தயத்தை போடி முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணனும், பெரியகுளம் முன்னாள் எம்.எல்.ஏ மூக்கையாவும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பந்தயத்தில் மாடுகள் சீறிப்பாய்ந்த நிலையில், சாலையின் இருபுறமும் நின்று மக்கள் ஆரவாரம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்