'சதுரங்க வேட்டை' பட பாணியில் இரிடியம் மோசடி

சதுரங்க வேட்டை பட பாணியில், இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில், சாலிகிராமத்தைச் சேர்ந்த ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கைது செய்துள்ளனர்.
x
சதுரங்க வேட்டை பட பாணியில், இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில், சாலிகிராமத்தைச் சேர்ந்த ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கைது செய்துள்ளனர்.

அதிமுக பிரமுகரும், தொழில் அதிபருமான நெடுமாறன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்து இருந்தார். அதில், தனக்கு அறிமுகமான நடிகர் அம்ரீஷ் உள்ளிட்ட சிலர், பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோயில் கோபுர கலசம் அரியவகை இரிடியம் வைத்திருப்பதாகவும், மலேசியாவில் இரண்டரை லட்சம் கோடிக்கு விற்கலாம் என்றும் கூறியதாகவும்,  இதற்காக 26 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாக அளித்த புகாரில், தான் ஏமாற்றப்பட்டதாக அம்ரீஷ் சரணடைந்ததை அடுத்து அவர் மீது புகார் திரும்பப்பெறப்பட்டது. இதுகுறித்து மற்றவர்களை தேடிய நிலையில், தரகராக செயல்பட்டு மோசடி செய்த சாலிகிராமத்தைச் சேர்ந்த பாபு என்கிற கபாலி பாபுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இரிடியம் பெயரில் மோசடி செய்யும் மற்றவர்களையும் தேடி வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்