ஓடும் லாரியில் முட்டை திருடிய இளைஞர்; இணையத்தில் பரவிய வீடியோ - பரபரப்பு

கடலூர் அருகே ஓடும் லாரியில் முட்டை திருடிய இளைஞரின் வீடியோ இணையத்தில் பரவியது.
x
கடலூர் அருகே ஓடும் லாரியில் முட்டை திருடிய இளைஞரின் வீடியோ இணையத்தில் பரவியது. மஞ்சக்குப்பம் பகுதியில் இருந்து திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு முட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி சென்றது. அப்போது ஒருவர் ஓடும் லாரியின் மீது ஏறி முட்டைகளை திருடினார். அதில் உடைந்த முட்டை ஒன்றை எடுத்த அவர், அதனை எடுத்து வெளியே வீசியதோடு தன் பேண்ட் பாக்கெட்டில் முட்டைகளை நிரப்பிக் கொண்டு கிளம்பினார். இந்த காட்சிகளை பின்னால் வந்த நபர் தன் செல்போனில் பதிவு செய்த நிலையில் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்