ரசாயன தொழில்துறையினர் "தமிழகத்தில் முதலீடு செய்ய முன் வரவேண்டும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு

ரசாயன தொழில்துறையினர் தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்.
ரசாயன தொழில்துறையினர் தமிழகத்தில் முதலீடு செய்ய முன் வரவேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
x
ரசாயன தொழில்துறையினர் தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார். 

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும்,  இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்களை தொடங்கியுள்ளது. இதன் உச்சி மாநாட்டில் தமிழக தொழில்துறை அமைச்சர் தஙகம் தென்னரசு பங்கேற்றார். அப்பொழுது பேசிய அவர்,  தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சிறந்த கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகவும், பெருந்தொற்று காலத்தில் தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும் தெரிவித்தார். ராசயனதுறை மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் முதலீடு செய்ய உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கூறிய அவர்,  ராசாய தொழில் துறையினர் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்