ஈஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்று கோபுர தரிசனம்

எமன் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஹரி சாப பயம் தீர்த்த ஈஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
ஈஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்று கோபுர தரிசனம்
x
எமன் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஹரி சாப பயம் தீர்த்த ஈஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, ராஜகோபுரம் கட்டப்பட்டதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக கோவிலில், யாக சாலை அமைக்கப்பட்டு கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், தன பூஜை உள்ளிட்டவை செய்யப்பட்டது. மேலும், பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை வைத்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் முன்னிலையில் புனித கும்பாபிஷேகம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்