"தீபத்திருவிழா : கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை" - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு இன்றும், நாளையும் 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தீபத்திருவிழா : கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
x
தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு இன்றும், நாளையும் 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி, திருவண்ணாமலையில் பக்தர்களை அனுமதிக்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்  தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தீபத்திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க  உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையில், தீபத் திருவிழாவிற்கு அதிகளவிலான பக்தர்கள் வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது எனவும்

கடந்தாண்டு பின்பற்றப்பட்டதை போல் கட்டுப்பாடுகளுடன்  மட்டுமே பக்தர்களை அனுமதிக்க முடியும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இன்றும், நாளையும் கிரிவலத்திற்கு உள்ளூரை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் வெளியூரை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்கள் என 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் எனவும் கோவில்களில் பக்தர்களை அனுமதிக்க கண்டிப்பாக வாய்ப்பில்லை எனவும் அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியதோடு அரசின் விளக்கத்தை பிற்பகல் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்