14 வயது சிறுமியை காதலித்த 17 வயது சிறுவன் - காதலை கைவிடுமாறு கூறி சிறுவன் மீது தாக்குதல்
பதிவு : நவம்பர் 07, 2021, 08:16 PM
வேலூரில் காதலை கைவிடுமாறு கூறி நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் ஆரணி சாலையை சேர்ந்த 17 வயது சிறுவன், ஓட்டல் உரிமையாளரின் 14 வயது மகளை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 23ஆம் தேதி சிறுமி, தன் காதலனான சிறுவனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக கூறி சிறுமி தரப்பு போலீசில் புகார் அளித்திருந்தது. இதன்பேரில் சிறுமி மாயம் என கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடையே கடந்த 24ஆம் தேதி இருவரும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த பெண் வீட்டார் நேராக அங்கு சென்று இருவரையும் பிடித்தனர். பின்னர் சிறுவனை போலீசில் ஒப்படைக்காமல் நேராக தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கி உள்ளனர். அப்போது பிளேடால் சிறுவனை உடலை கிழித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பிறகு சிறுவன் மாடியில் இருந்து விழுந்து விட்டதாக கூறி வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுவனை அவர்களே அனுமதித்துள்ளனர். இந்த தகவல் சிறுவன் வீட்டாருக்கு தெரியவரவே, அதிர்ந்து போன அவர்கள், நேரில் சென்று பார்த்தனர். அப்போது உடலில் இருந்த காயங்களை கண்டு பதறிப் போன அவர்கள், சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் அளித்தனர். 

இதன்பேரில் சிறுமியின் தந்தை ராஜகுரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேநேரம் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக்கோரி சிறுவனின் தந்தை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 27ஆம் தேதி புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து சிறுவனின் உறவினர்கள் கடந்த 29ஆம் தேதி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாதவன், செல்வக்குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் அப்போது கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. சிறுமியின் தந்தை உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாலும், இதில் 11 பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கும் சிறுவன் தரப்பு உறவினர்கள், உரிய நியாயம் வேண்டி நிற்கின்றனர். காதல் விவகாரத்தில் சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் உறவினர்களை மீளா அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

520 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

96 views

பிற செய்திகள்

செல்போன் பறிப்பு - மூவர் கைது

மதுரவாயல் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

3 views

"அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு"

அம்மா உணவகத்தை முடக்க, திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

9 views

வசீம் அக்ரம் கொலை வழக்கு - 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

8 views

இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 views

கரூரில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி - வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

8 views

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.