மறைமுக தேர்தல் முடிவு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த மறைமுக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மறைமுக தேர்தல் முடிவு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த மறைமுக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் அனைத்திலும் திமுக வெற்றி பெற்ற நிலையில், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கான 
தேர்தலில் - திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ்  2 இடங்களிலும், விசிக -1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

மொத்தம் உள்ள 74 ஊராட்சி ஒன்றிய குழு தலைவருக்கான பதவிகளில் - திமுக 68 இடங்களிலும், அதிமுக மற்றும் மதிமுக தலா 1 இடத்திலும் வெற்றி பெற்ற நிலையில் 74 ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக 62 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும், ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் தேர்தல் குறைபாடு காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் 8 இடங்களில் குறைவெண்  வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தற்செயல் தேர்தலில் - திமுக 4 இடங்களிலும்,  காங்கிரஸ்1 இடத்திலும் வெற்றி பெற்ற நிலையில் ஒரு இடத்தில் தேர்தல் நடைபெறவில்லை. 13 ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான மறைமுக தற்செயல் தேர்தலில் திமுக 7 இடங்களிலும், அதிமுக, பாமக, சுயேட்சை  ஆகியவை தலா 1 இடத்தில் வெற்றி பெற்ற நிலையில் 3 இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை.


Next Story

மேலும் செய்திகள்