லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக 2வது முறையாக சம்மன்

சொத்த குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக 2வது முறையாக சம்மன்
x
சொத்த குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில்,  25 லட்ச ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீதம் வரை அவர் சொத்து சேர்த்தது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணைக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி நேரில் ஆஜராக கோரி லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் பணிகளைக் காரணம் காட்டி விஜயபாஸ்கர் கால அவகாசம் கேட்டு தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார். இதனையடுத்து அக்டோபர் 25 ஆம் தேதி அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்