பத்திரிகையாளர் குடியிருப்பு விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

பத்திரிகையாளர் குடியிருப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டுமானங்களுக்கு தடை விதித்த என்ஜிடி உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
பத்திரிகையாளர் குடியிருப்பு விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
x
பத்திரிகையாளர் குடியிருப்பிற்கு ஒதுக்கப்பட்ட  இடத்தில் கட்டுமானங்களுக்கு தடை விதித்த என்ஜிடி உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

முன்னதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குறிப்பிட்ட பத்திரிகையாளர்களுக்கு விதிகளை மீறி, மதுரை புதுக்குளம் கண்மாய் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்ய வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் நிலம் டிஸ்போசல் பிரிவு மூலம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை என்ஜிடி விசாரித்த நிலையில், தமிழக அரசின் முடிவை தீர்ப்பாயம் தடை செய்தது.

மேலும், கண்மாயைப் பழைய நிலைக்கு கொண்டு வரும் வகையில், அங்கு ஏதேனும் கட்டுமானங்கள் இருந்தால் அதை உடனடியாக அகற்றவும் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி உத்தரவிட்டது. 

இது தொடர்பாக தமிழக அரசு  உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்