உள்ளாட்சி தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல்
x
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 
 
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் எஞ்சியுள்ள 28 மாவட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. 
 
இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.
 
இந்நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, 9 மாவட்டங்களில் உள்ள 27 ஆயிரத்து 3 பதவியிடங்களுக்கு 98,151 வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில்,
 
இதில் ஆயிரத்து 166 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 
 
14 ஆயிரத்து 571 வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்ப பெற்ற நிலையில், 
 
2 ஆயிரத்து 981 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 
2 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் எந்த வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்படாததால், 
 
இறுதியாக 23 ஆயிரத்து 998 பதவியிடங்களுக்கு, 79,433 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
இதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 827 பேரும்,
 
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 ஆயிரத்து 64 பேரும்,
 
கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 ஆயிரத்து 792 பேரும், 
 
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 61 ஆயிரத்து 750 பேரும் போட்டியிட உள்ளனர். 
 
அதேபோல், 28 மாவட்டங்களில் இறுதியாக 418 பதவியிடங்களுக்கு ஆயிரத்து 386 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்