தீரன் சின்னமலை நினைவு தினம் - எடப்பாடி பழனிசாமி மரியாதை

தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள நினைவு சின்னத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.
x
தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள நினைவு சின்னத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216வது நினைவுதினத்தை முன்னிட்டு, சங்ககிரி மலைக்கோட்டையில், தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்தில், அவரது உருவப்படத்திற்கு, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் இருக்கும் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள நினைவு சின்னத்திற்கும் அவர் மலர் தூவி மரியாதை செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்