"பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவை எளிமையாக இருக்க வேண்டும்" - முதல்வர் அறிவுறுத்தல்

பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்றவகையில் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்
x
வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வுக் கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கினை முழுவதும் எய்திட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி வரி இழப்பீடு தொகையை மத்திய அரசிடமிருந்து விரைந்து பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.அத்துடன், வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் எவ்வித தொய்வுமின்றி தீர்வு காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.மேலும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.தொடர்ந்து பதிவுத்துறையில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் உள்ள ஆவண தொகுதிகளை கணினியில் பதிவு செய்தல் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். 



Next Story

மேலும் செய்திகள்