பணிகளைப் புறக்கணித்த பயிற்சி மருத்துவர்கள் - ஊதியத்தை உயர்த்தக் கோரி போராட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் பல்கலைக்கழக மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக கொரோனா வார்டுகளில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியமாக 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இந்நிலையில், மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தீர்வு கிடைக்காததால், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 150க்கும் மேற்பட்டோர் பணிகளைப் புறக்கணித்து மருத்துவமனை வலாகத்தில் தரையில் அமர்ந்து முழு நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பேசிய பயிற்சி மருத்துவர்கள், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்