மேகதாது பிரச்சினை - அனைத்து கட்சி குழு டெல்லியில் முகாம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை தமிழக அனைத்து கட்சி குழு சந்திக்க உள்ளது.
x
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை தமிழக அனைத்து கட்சி குழு சந்திக்க உள்ளது. 
 
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக அனைத்து கட்சி குழு டெல்லியில் முகாமிட்டுள்ளது.
 
திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், .வைகோ, ஜி.கே.மணி, பாலகிருஷ்ணன், திருமாவளவன், பால் கனகராஜ் உள்ளிட்ட 13 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். 
 
மத்திய அமைச்சரை சந்திக்கும் போது, கடந்த 12ஆம் தேதி தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை எதிர்த்து ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களின் நகல் வழங்கப்பட உள்ளன. 
 
மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதிக்கக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்த உள்ளனர். ஒரு வேளை மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் அந்த குழு, மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் எடுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்