கொங்குநாடு பற்றிய சர்ச்சைகள் : ஒரு மாநிலத்தை பிரிப்பதற்கான சட்ட நடைமுறைகள் என்ன?

மாநில பிரிப்பு, புதிய மாநில அமைப்பு போன்ற சர்ச்சைகள் சமீப நாட்களாக பேசுபொருளாகி இருகின்றன.
x
மாநில பிரிப்பு, புதிய மாநில அமைப்பு போன்ற சர்ச்சைகள் சமீப நாட்களாக பேசுபொருளாகி இருகின்றன.

ஒரு மாநிலத்தை உருவாக்கவோ, மாநிலத்தின் எல்லைகளை பிரித்து புதிய மாநிலத்தை அமைக்கவோ, ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களை ஒன்றாக இணைக்கவோ, நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 
3 அதிகாரம் வழங்குகிறது.

மாநில எல்லை விரிவாக்கம், பெயர் மாற்றம் போன்றவையும் இதில் அடக்கம்.

ஒரு மாநிலத்தை புதிதாக அமைக்க வேண்டுமெனில், குடியரசுத் தலைவரின் பரிந்துரையிலான சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

பின்னர், இந்த மசோதா குறித்த கருத்துகளை சம்மந்தப்பட்ட மாநில சட்டப்பேரவையிடம் குடியரசுத் தலைவர் கேட்பார். ஆனால், மாநில சட்டப்பேரவையின் கருத்துகள் நாடாளுமன்றத்தை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டு, மசோதா நிறைவேற்றப்படும்.

மத்திய அரசு முன்வைக்கும் மசோதாவை மாநில சட்டப்பேரவை ஏற்றாக வேண்டிய எந்தக் கட்டாயமும் கிடையாது. அதேசமயம், மாநில சட்டப்பேரவையின் கருத்துகள் குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தாது.

இந்த நடைமுறையின் படியே, 2000ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட், பீகாரில் இருந்து ஜார்கண்ட் என தனி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 

இதேபோல், 2014ல் ஆந்திராவில் இருந்து தெலங்கானாவை பிரித்து, தனி மாநிலம் உருவாக்கப்பட்டது.

மேலும், 2019ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, சட்டப்பேரவையுன் கூடிய ஜம்மு-காஷ்மீர் மற்றும் சட்டப்பேரவை இல்லாத லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆனது.


Next Story

மேலும் செய்திகள்