மளிகை பொருட்கள் விலை உயர்வு : "டீசல் விலை உயர்வே காரணம்"- வியாபாரிகள் கருத்து

உற்பத்தி குறைவால் உப்பு விலை உயர்ந்துள்ளதுடன், மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
x
ஊரடங்கு மற்றும் மழை காரணமாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்திப்பணி பாதிக்கப்பட்டதால், உப்பு அதிக விலைக்கு  விற்பனையாகி வருகிறது. 160 ரூபாய்க்கு விற்பனையான 25 கிலோ உப்பு மூட்டை, 40 ரூபாய் விலை உயர்ந்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.மேலும், 80 ரூபாய்க்கு விற்பனையான வெள்ளைச் சுண்டல் 110 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட குண்டு மிளகாய் வத்தல் 350 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.தேங்காய் எண்ணெய் விலை 220 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 250 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்ற கடலை எண்ணெய் 200 ரூபாய்க்கும் விற்பநையாகிறது. மேலும், நல்லெண்ணெய் விலை 230 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

மேலும், நெய் விலை 520 ரூபாயிலிருந்து 570 ரூபாய்க்கும், அரிசி 25 கிலோ மூட்டை 1250 ரூபாயிலிருந்து 1300 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. அதே போல, கோதுமை 10 கிலோ மூட்டை 390 ரூபாயிலிருந்து 420 ரூபாயாகவும், பூண்டு 80 ரூபாயிலிருந்து 130 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்