டிஜிட்டல் முறையில் நடைபெறும் கொள்ளைகளை கண்டறிய நவீன கருவியை வடிவமைத்துள்ள மாணவிகள்

ஏடிஎம் உள்ளிட்ட இடங்களில் டிஜிட்டல் முறையில் நடைபெறும் திருட்டு சம்பவங்களைக் கண்டுபிடிக்க, கும்பகோணம் கல்லூரி மாணவிகள் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
x
கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள், சொர்ணமால்யா, ஆர்த்திகா மற்றும் ஆர்த்தி ஆகியோர் இணைந்து, டிஜிட்டல் முறையில் நடைபெறும் குற்றங்களைக் கண்டுபிடிக்க நவீன கருவியை வடிவமைத்துள்ளனர். திருடப்பட்ட பொருட்களை எளிமையான மிகக் குறைந்த நேரத்தில் கண்டுபிடிக்க ஏதுவாக இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதை, வங்கி லாக்கர், வீட்டு பீரோ, பெட்டி மற்றும் ஏடிஎம் இயந்திரம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பொருட்கள் திருடப்பட்டால் இந்த கருவி, திருடனின் புகைப்படம் மற்றும் கொள்ளையன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துக் கூறி விடும். வெறும் 800 ரூபாய் செலவில்  தயாரிக்கப்பட்ட இந்த பிரத்தியேகமான கருவியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் அவர்கள் பார்வையிட்டு, மாணவிகளின் திறமையை வெகுவாகப் பாராட்டினார்.



Next Story

மேலும் செய்திகள்