"மருத்துவ படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% ஒதுக்கீடு" - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு சேர்க்கை இட ஒதுக்கீடு, 10 விழுக்காடாக உயர்வதாக, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
x

மருத்துவ படிப்பு சேர்க்கையில் அதிமுக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 7.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கொண்டுவந்து அமல்படுத்தியது. அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை  ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சேர்க்கையில் 2.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல், இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு, அரசு  நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5 விழுக்காடு என, ஒட்டு மொத்தமாக 10 சதவிகித இட ஒதுக்கீடு, மருத்துவ படிப்பு சேர்க்கையில் வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் மகேஷ்பெய்யாமொழி தெரிவித்தார்.
 
Next Story

மேலும் செய்திகள்