தமிழகத்துக்கு 3.5 லட்சம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு

தமிழகத்திற்கான ரெம்டெஸிவிர் ஒதுக்கீடு மூன்றரை லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
x
தமிழகத்திற்கான ரெம்டெஸிவிர் ஒதுக்கீடு மூன்றரை லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரெம்டெஸிவிர் ஒதுக்கீடு 76 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு, ஏப்ரல் 21 முதல் மே 16 ஆம் தேதி வரையான காலகட்டத்தில் 53 லட்சம் ரெம்டெஸிவிர் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே இரண்டு லட்சத்து 5 ஆயிரமாக இருந்த தமிழகத்திற்கான  ரெம்டெஸிவிர் ஒதுக்கீடு தற்போது மூன்றரை  லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களுக்கான ரெம்டெஸிவிர் ஒதுக்கீட்டை 76 லட்சமாக மத்திய அரசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்