ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது - வேலூர் அரசு மருத்துவமனையில் 7 பேர் பலி

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 7 நோயாளிகள் பலியான விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குனர், மருத்துவ கல்லூரி டீனுக்கு ,மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது - வேலூர் அரசு மருத்துவமனையில் 7 பேர் பலி
x
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 7 நோயாளிகள் பலியான விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குனர், மருத்துவ கல்லூரி டீனுக்கு ,மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 19 ஆம் தேதி , ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக  கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ், ராஜேஸ்வரி மற்றும் பிரேம் ஆகியோர் உயிரிழந்தனர். இதேபோல மற்ற நோய்களுக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன், மதன், லீலாவதி, கபாலி ஆகியோரும்  பரிதாபமாக உயிரிழந்தனர். நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன், சம்பவம் தொடர்பாக 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்