பனிப்பொழிவு, வரத்து குறைவால் வெங்காய விலை உயர்வு - வியாபாரிகள் தகவல்

சென்னை கோயம்பேடு சந்தையில், சின்ன வெங்காயத்தின் விலை, கிலோ, 120 ரூபாயாக உயர்ந்து இருப்பது மக்களை கவலை அடையச் செய்து உள்ளது
x
சென்னை கோயம்பேடு சந்தையில், சின்ன வெங்காயத்தின் விலை, கிலோ, 120 ரூபாயாக உயர்ந்து இருப்பது மக்களை கவலை அடையச் செய்து உள்ளது. 
 
கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்தது. 

பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவால், வெங்காயத்தின் விலை உயர்ந்ததாக கூறப்பட்ட நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை, கிலோ, 120 ரூபாயை எட்டி உள்ளது. 

இதேபோல், பெரிய வெங்காயம், விலை 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் 60 முதல் 70 ரூபாய் வரை, பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது

பதுக்கல் மற்றும் பெட்ரோல் டீசலின் விலை உயர்வால், போக்குவரத்து செலவு அதிகரித்து, வெங்காய விலை அதிகரித்து வருவதாக வெங்காய வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். 

வெங்காயத்தின் தொடர் விலையேற்றம் சாமானிய மக்களை கவலை அடைய செய்து உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்