அரசியல் கட்சிகள் தேவைக்காக மாவட்டங்களை பிரிப்பதா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

அரசியல் கட்சிகள் தங்கள் தேவைகளுக்காக மாவட்டங்களை பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் தேவைக்காக மாவட்டங்களை பிரிப்பதா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
x
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தென்காசி மாவட்டத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதால், ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர், மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்படும்போது உள்கட்டமைப்பு வசதிகளை முறையாக பார்ப்பதில்லை என்றனர். 2 அல்லது 3 தாலுகாக்கள் கொண்ட அரியலூர், பெரம்பலூர் தனி மாவட்டங்களாகவும், 11 தாலுகாக்கள் கொண்ட திருவண்ணாமலை ஒரே மாவட்டமாகவும் இருப்பதை சுட்டிக்காட்டினர். குறைந்தது 5 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி, ஒரு ஆட்சியர், ஒரு எஸ்பி மற்றும் ஒரு மாவட்ட நீதிபதி இருப்பதுபோல் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்