பட்டாசு வெடிப்பதில் தகராறு - இரு தரப்பினர் மோதல், அரிவாள் வெட்டு

விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தில், அங்கப்பன் மற்றும் கந்தசாமி ஆகிய இரு தரப்பிற்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி நேற்றிரவு பட்டாசு வெடித்ததில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பட்டாசு வெடிப்பதில் தகராறு - இரு தரப்பினர் மோதல், அரிவாள் வெட்டு
x
விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தில், அங்கப்பன் மற்றும் கந்தசாமி ஆகிய இரு தரப்பிற்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி நேற்றிரவு பட்டாசு வெடித்ததில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கற்களால் வீசியும், பயங்கரமான ஆயுதங்கள் மூலமும் இரு தரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் கந்தசாமி, வினோத், ராஜாங்கம் ஆகிய 3 பேர் அரிவாள் வெட்டால் பலத்த காயமடைந்தனர். மேலும் 4 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்க சென்ற சங்கர் என்பவரை போலீசார் விசாரணைக்காக பிடித்து வைத்துக்கொண்டு விட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்று காலையில், சங்கரை விடுவிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை அடுத்து, சங்கர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் மேலும், மோதல் ஏற்படுவதை தவிர்க்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்