பட்டாசு வெடித்ததில் விதிமீறல் - சென்னையில் 348 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை, மதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டாசு வெடித்ததில் விதிமீறல் - சென்னையில் 348 பேர் மீது வழக்குப்பதிவு
x
காற்று மாசு ஏற்படுவதை குறைக்கும் வகையில் இந்தியா முழுவதும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் காலை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், தீபாவளி தினமான நேற்று, இந்த நேர கட்டுப்பாட்டை மீறி நாள் முழுவதும் பட்டாசுகளை வெடித்து, மக்கள் தீபாவளியை கொண்டாடினர். இந்த நிலையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக , சென்னையில் 348 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மதுரையில் 154 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது, இந்திய தண்டனை சட்ட பிரிவு188-  அரசு உத்தரவை மீறுதல், 285- வெடி பொருட்களை அஜாக்ரதையாக கையாளுதல் ஆகிய  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்