சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு : எஸ்.ஐ. ரகுகணேஷ் ஜாமீன் கோரி மனு தாக்கல் - ஜாமீன் வழங்க சி.பி.ஐ. வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு : எஸ்.ஐ. ரகுகணேஷ் ஜாமீன் கோரி மனு தாக்கல் - ஜாமீன் வழங்க சி.பி.ஐ. வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு
x
சாத்தான் குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் காவல் உதவி  ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். விசாரணையின் போது ஆஜரான சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ரகு கணேஷூக்கு  ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தி கலைக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார். தந்தை - மகனை காவல்துறை அடித்து சித்ரவதை செய்த விவகாரத்தில் ரகு கணேஷ் சம்பந்தபட்டிருப்பது தொடர்பான சாட்சிகள், ஆவணங்கள் சிபிஐ வசம் உள்ளதாக அவர் கூறினார். சிபிஐI பதில் அறிக்கை தாக்கல் செய்து இறுதி வாதம் வைக்க கால அவகாசம் வேண்டும் என வழக்கறிஞர் கேட்டதையடுத்து நீதிபதிவி சாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்