"இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு குழுவில் தென்னிந்தியர்கள் இடம்பெற வகை செய்ய வேண்டும்" - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள 16 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் தென்னிந்தியர்கள் இடம் பெற வகை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு குழுவில் தென்னிந்தியர்கள் இடம்பெற வகை செய்ய வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
x
இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள 16 உறுப்பினர்கள் கொண்ட குழுவில், தென்னிந்தியர்கள் இடம் பெற வகை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சி சிவாவின் ஆலோசனையை கேட்டு பாராட்டி இது பரிசீலிக்க வெங்கைய்யா நாயுடு உத்தரவிட்டிருப்பது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டார். அதேநேரம் இந்தியாவின் மூத்த மொழியாக உள்ள தமிழில் இருந்து ஒருவர் கூடம் இடம்பெற செய்யாததற்கு கண்டனத்தையும் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையுடனும், கலாச்சாரத்துடனும் பாஜக விளையாடி வருவதாக குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின், குழுவில் தமிழகத்தை சேர்ந்த அறிஞர் இடம் பெற வேண்டும் என்றும் கேட்டுள்ளார். தமிழகம் மட்டுமல்லாமல், தென்னிந்தியாவில் இருந்து பட்டியலின, சிறுபான்மை சமூக பிரதிநிதிகளும் குழுவில் இடம் பெற வகை செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்