இந்திய கலாசார மற்றும் பரிணாம வளர்ச்சி ஆய்வுக்குழு: "தென்னிந்தியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்" - திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை

இந்திய கலாசாரம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுக்குழுவில் தென்னிந்தியர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று திமுக எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கலாசார மற்றும் பரிணாம வளர்ச்சி ஆய்வுக்குழு: தென்னிந்தியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் - திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை
x
இந்திய கலாசாரம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுக்குழுவில் தென்னிந்தியர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று திமுக எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய கலாசாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு குறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், கலாசாரம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக பேசினார். அந்தக் குழுவில் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர்களே அதிகம் இடம் பெற்று இருப்பதாக கூறிய அவர், தமிழர்கள் உள்பட தென்னிந்தியர்களுக்கும் குழுவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்