"குட்கா ஊழல் - சந்தேகங்கள் களையப்பட வேண்டும்" - தி.மு.க தலைவர் ஸ்டாலின்

குட்கா முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களை நெருங்கவிடாமல் சிபிஐயை தடுக்கும் உயர்மட்ட சக்தி எது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
குட்கா ஊழல் - சந்தேகங்கள் களையப்பட வேண்டும் - தி.மு.க தலைவர் ஸ்டாலின்
x
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  குட்கா  நாடகங்களையும், செயலிழந்த நிலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் சி.பி.ஐ. மயான அமைதி காப்பது ஏன் எனக் கேட்டுள்ளார். துரும்பு கிடைத்தால்கூட குதிரையாகப் பாயும் சி.பி.ஐ, குட்கா விவகாரத்தில் தேவையான ஆதாரம் கிடைத்தும் ஆமை வேகத்தில்கூட நகர மறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.  இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை நெருங்க விடாமல் சி.பி.ஐ.,யைத் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது? எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், மக்களின் உயிரை பறிக்கும் குட்கா விவகாரத்தில் உள்ள ரகசிய கூட்டணி மக்களுக்கு தெரிய வேண்டும் என வலியுறுத்தினார்.  சந்தேகங்கள் களையப்படாவிட்டால், உண்மைகளாக மக்கள் மனதில் நின்று நிலைத்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்