கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 28ந் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக வரும் 28ந் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 28ந் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
x
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக வரும் 28ந் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 25ந்தேதி வரை விநாடிக்கு 50 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடவும், அணைக்கு கூடுதல் நீர்வரத்து இருந்தால் 2ஆயிரத்து 549 ஏக்கர் நிலங்களின் குறைந்தபட்ச தேவைக்கு கூடுதலாக உள்ள நீரினை திறக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 
 வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3232 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம், நீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறக்கவும் உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், இதன்மூலம்   நாங்குனேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 781 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்