முழுக் கொள்ளளவை நெருங்கும் பவானி அணை- வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளவான 102 அடியில் 101 அடியை எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முழுக் கொள்ளளவை நெருங்கும் பவானி அணை- வெள்ள அபாய எச்சரிக்கை
x
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளவான 102 அடியில் 101 அடியை எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என்பதால் பவானி ஆற்றில் குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்