12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டிலிருந்தே கல்வி - tiny.cc/veetuppalli-யில் ஆசிரியர்கள் தரவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்

12ஆம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்க ஏதுவாக பாட வீடியோக்களை மடிக் கணினியில் பதிவேற்றம் செய்து கொடுக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டிலிருந்தே கல்வி - tiny.cc/veetuppalli-யில் ஆசிரியர்கள் தரவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்
x
கொரோனா எதிரொலியால் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி போதிக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாகி உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 12ஆம் வகுப்பு பாட சம்பந்தமாக மேலும் 297 வீடியோக்கள் தயாராகி உள்ளதாக கூறியுள்ளார். அந்தக் காட்சிகளை, மாணவர்களின் மடி கணினியில் பதிவேற்றம் செய்து கொடுக்குமாறு கோரியுள்ள அவர், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் 12ஆம் வகுப்பு மாணவர்கள், வீட்டில் இருந்தே படிக்கும் வகையில் இதை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். வீடியோக்களை,  tiny.cc/veetuppalli என்ற இணைய முகவரி வாயிலாக ஆசிரியர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்