கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம் - தொற்று ஏற்படும் தெரு வாசிகள் அனைவருக்கும் பரிசோதனை

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் தெருவில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம் - தொற்று ஏற்படும் தெரு வாசிகள் அனைவருக்கும் பரிசோதனை
x
சென்னையில் தற்போது வரை  92 ஆயிரத்து 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 76 ஆயிரத்து 496 பேர் குணமைடைந்து உள்ளனர். இந்நிலையில்  மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்த தண்டையார் பேட்டை மற்றும் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று குறைந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால்  கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில்  பாதிப்பு  அதிகரித்துள்ளது. இதனையடுத்து, பாதிப்பு அதிகரித்துவரும் மண்டலங்களில், தொற்று கண்டறியப்படும் தெருவில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தற்போது, கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் யாருக்கேனும் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர் வசிக்கும் தெருவில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்