வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி பலியான சம்பவம் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3வது நாளாக போராட்டம்

தென்காசி அருகே வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்ற விவசாயி உயிரிழந்த நிலையில் வனத்துறை அதிகாரிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.
x
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து. 72 வயதான இவரை வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்ற போது அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் குற்றவியல் நீதிபதி  விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து சிவசைலம் பகுதியில் உள்ள வனச்சரகர் அலுவலகத்தில் குற்றவியல் நீதிபதி கார்த்திகேயன் வனத்துறை அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். இதனிடையே உரிய நடவடிக்கை எடுக்காமல் உயிரிழந்தவரின் சடலத்தை வாங்க போவதில்லை என கூறி உறவினர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வாகைக்குளம், சிவசைலம் பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்