கொரோனா நோயாளிகள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் ?: பதிவேடு பராமரிக்கப்படுகிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள், எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா நோயாளிகள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் ?: பதிவேடு பராமரிக்கப்படுகிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
x
கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் மாயமானார்.
இதையடுத்து தன் தந்தையை மீட்டுத்தரக்கோரி அவரது மகன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. காய்ச்சல் முகாமிலிருந்து ஒருவரை கண்டறிந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பதுடன் தங்கள் பணி முடிந்துவிடுவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள், எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்