டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பா? - சுகாதார பணிகளை தீவிரப்படுத்தும் மாநகராட்சி

சென்னையில் கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில்,டெங்கு காய்சல் பரவ தொடங்கியுள்ளதால் மாநகராட்சி சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பா? - சுகாதார பணிகளை தீவிரப்படுத்தும் மாநகராட்சி
x
சென்னையில்,  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து முன் கூட்டியே சிகிச்சை அளிப்பதால், தொற்று பரவல் வீதம் குறைந்துள்ளது. இந்த நிலையில், மழைக்கால நோயான டெங்கு காய்சல் பரவத் தொடங்கி உள்ளது.   நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக கூறப்பட்டதை அடுத்து  மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.  கொரோனா தடுப்பு பணிகளுக்கு இடையில் டெங்கு தடுப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. கொரோனா தடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள், டெங்கு தொடர்பான ஆய்வுகளையும்  வீடு வீடாக மேற்கொண்டு வருகின்றனர். நங்கநல்லூர் சிறுமி டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்