"சாத்தான்குளம் வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் மூன்று நாள் சிபிஐ காவல்" - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஐந்து காவலர்களும் சிபிஐ காவலில் விசாரிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்
சாத்தான்குளம் வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் மூன்று நாள் சிபிஐ காவல் - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
x
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை மூன்று நாள் சிபிஐ காவலில் விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. 16ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஐந்து காவலர்களையும் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்

காவலர் முத்துராஜுவிடம் சிபிஐ விசாரணை


சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலர் முத்துராஜை, காவல் நிலையம் மற்றும் கடைத் தெருக்கு அழைத்து வந்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளாக பென்னிக்ஸ், ஜெயராஜ் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரித்த சிபிசிஐடி போலீசார், காவல் ஆய்வாளர் உள்பட 5 பேரை கைது செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் முத்துராஜுவை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். வன்முறை நடந்த காவல் நிலையத்துக்கு, நேற்றிரவு அவரை அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள், ஜெயராஜ், பென்னிக்ஸை யார், யார் தாக்கினார்கள், எப்படி எல்லாம் தாக்குதல் நடந்தது என்பது குறித்து நடித்துக்காட்டச் சொல்லி, அதை வீடியோ பதிவு செய்தனர். இதேபோல், கடை வைத்திருக்கும் பகுதியிலும் நடித்துக் காட்டக் கூறினர். இதனால், அந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர்  குவிக்கப்பட்டு இருந்தனர். இதைதொடர்ந்து இரண்டு மணி நேர விசாரணையை முடித்து கொண்டு சி.பி.ஐ அதிகாரிகள் கார் மூலம் மதுரை சென்றனர்

ஜெயராஜ் குடும்பத்திடம் மனித உரிமை ஆணைய குழு விசாரணை 


சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ் வீட்டில் சென்னை மனித உரிமை ஆணையத்தின் குழு விசாரணை நடத்தியது. ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தாரிடம் சம்பவம் தொடர்பாக முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் ரேவதியும் உடன் இருந்தார். அதன் பிறகு பென்னிக்ஸ் கடை அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் சிலரிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்