"ரியல் எஸ்டேட் அதிபர் தரப்பு ரவுடிகளை கைது செய்க" : திருப்போரூர் சம்பவம் - செங்காடு கிராம மக்கள் போராட்டம்

திருப்போரூர் சம்பவத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமார் தரப்பு ரவுடி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி செங்காடு கிராம மக்கள் திருப்போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் தரப்பு ரவுடிகளை கைது செய்க : திருப்போரூர் சம்பவம் - செங்காடு கிராம மக்கள் போராட்டம்
x
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இள்ளலூர் செங்காடு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமார் என்பவருக்கும், திமுக எம்.எல்.ஏ இதயவர்ம‌னுக்கும் கோயில் நிலம் ஆக்கரமிப்பு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்த‌து. இந்த முன்விரோதம் கடந்த 2 தினங்களுக்கு முன் துப்பாக்கிசூடு வரை சென்றது. இதில் துப்பாக்கியால் சுட்டதாக எம்.எல்.ஏ இதயவர்ம‌ன் உள்ளிட்ட 12 பேரை கைது செய்த போலீசார், பூந்தமல்லி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், திருப்போரூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட செங்காடு கிராமத்தினர், கிராம மக்களை விரட்டி விரட்டி வெட்டிய இமயம் குமாரின் 70 பேர் கும்பலை கைது செய்யுமாறு வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த ஏ.எஸ்.பி சுந்தரவதனம் ரவுடி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்