"மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
x
நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

* இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், Card-1 கிரிமிலேயர் என்ற கருதுகோள் குறித்து, பி.பி.சர்மா குழு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரிப்பதோடு, 

* ஓபிசி வகுப்பில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாகச் சம்பளத்தைச் சேர்க்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

* மேலும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டினை ரத்து செய்வதோடு, 

* இடஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட்ட பின்னர் சில இடங்களை தனியாக வைத்திருப்பது உட்பட, மாநில அரசுகள் தங்களுக்கென சொந்தத் தேர்வு முறையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

* மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். 

* நாட்டில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலன் பாதுகாக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்