நீட் தேர்வு செப் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு செப் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்
x
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு வருகிற 26-ந்தேதி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் காராணத்தால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் ஜூலை 26-ல் நடக்க இருந்த நீட் தேர்வு செப்டம்பர் 13-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதேபோல் ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 6-ந்தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்